×
Saravana Stores

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கே.கே.ஆர். அணி பலம் வாய்ந்ததாக உள்ளது: சொல்கிறார் ஆகாஷ் சோப்ரா

கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கேகேஆர் அணி பலம் வாய்ந்ததாக இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கேகேஆர் அணி தொடக்க வீரராக பில் சால்ட் என்ற அதிரடி பேட்ஸ்மேனை பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆப்கானிஸ்தான் அதிரடி விக்கெட் கீப்பர் ரஹ்மத்துல்லா குர்பாசை தொடக்க வீரராக பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு ஒரு விக்கெட் கீப்பரும் கிடைத்துவிடுகிறார். அவருக்கு ஜோடியாக வெங்கடேஷ் அய்யரை களம் இறக்கலாம்.

3வது வீரராக கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், 4வது வீரராக, நிதிஷ் ராணாவை பயன்படுத்தலாம். இதே போன்று அதிரடி வீரர் ரிங்கு சிங்கை 5வது இடத்தில் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும். 6வது வீரராக ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ ரசலை களமிறக்கவேண்டும். இதன் மூலம் கேகேஆர் அணியின் பிளேயிங் லெவனில் பேட்டிங் வலுவாக இருக்கும். இதன் பிறகு சுனில் நரேன், ஹர்ஷித் ராணா மற்றும் ஸ்டார்க், சேத்தன் சக்காரியா, மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய வீரர்களை பந்துவீச்சாளராக பயன்படுத்தலாம். இதே போன்று சுயாஷ் ஷர்மா என்ற சுழல் பந்துவீச்சாளரை இம்பேக்ட் வீரராக விளையாட வைக்கவேண்டும்.

இதேபோன்று கேகேஆர் அணியின் சொந்த மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இதனால் நடப்பு சீசனில் ஆடுகளத்தை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்ற கேகேஆர் அணி வற்புறுத்த வேண்டும். கேகேஆர் அணியில் இந்திய வீரர்களின் பேட்டிங் அதிகமாக இருப்பதால் அது அவர்களுக்கு சாதகமாக அமையும். இந்த பேட்டிங் ஆர்டரை வைத்துக்கொண்டு கேகேஆர் அணியால் பிளே ஆப் சுற்றுக்கு இம்முறை தகுதி பெற முடியும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கே.கே.ஆர். அணி பலம் வாய்ந்ததாக உள்ளது: சொல்கிறார் ஆகாஷ் சோப்ரா appeared first on Dinakaran.

Tags : KKR ,IPL cricket ,Akash Chopra ,Kolkata ,Bill Salt ,Dinakaran ,
× RELATED 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடர்;...