×
Saravana Stores

குத்துச்சண்டை போட்டியில் கிருஷ்ணகிரி மாணவர்கள் வெற்றி

 

கிருஷ்ணகிரி, மார்ச் 19: அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில், பதக்கங்களை வென்று சாதனை படைத்த கிருஷ்ணகிரி மாணவர்களை கலெக்டர் பாராட்டினார். தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிகள், அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற்றது. இதில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும், சப்ஜூனியர் மற்றும் ஜூனியர் வயது பிரிவினர் கலந்து கொண்டனர். இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் பிரித்திவிராஜ் என்ற மாணவன் தங்க பதக்கமும், வசந்த் என்ற மாணவன் வெண்கல பதக்கமும் வென்று பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கும், பயிற்றுனர் முனிராசுவுக்கும், மாவட்ட கலெக்டர் சரயு, வருவாய் கோட்டாட்சியர் பாபு மற்றும் மாவட்ட விளையாட்டு -இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

The post குத்துச்சண்டை போட்டியில் கிருஷ்ணகிரி மாணவர்கள் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,National Boxing Tournament ,Guwahati, Assam ,National Boxing Competitions ,Guwahati ,Assam ,Dinakaran ,
× RELATED ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை...