×

ரூ.2.91 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

 

ஓமலூர், மார்ச் 16: ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய அளவிலான மின்னணு கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. தற்போது திருவிழாக்கள் நடைபெறுவதால் தேங்காய் விலை உயந்துள்ளது.  அதனால், கொப்பரை உற்பத்தி குறைந்து, நேற்று நடந்த ஏலத்திற்கு குறைந்தளவில் கொப்பரையை கொண்டு வந்திருந்தனர். இதில் 43 வகை எண்ணெய் பிழிதிறன் கொண்ட 3523 கிலோ கொப்பரையை, 19 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ரூ.2லட்சத்து 91 ஆயிரத்து 160க்கு 5 வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.நேற்று நடந்த ஏலத்தில், கொப்பரை அதிரடியாக ரூ.5.47 வரை விலை உயர்ந்தது. கடந்த வாரம் ரூ.84.89 காசுக்கு விற்பனையான கொப்பரை, நேற்றைய ஏலத்தில் ரூ.90.36 காசுக்கு விற்பனையானது. குறைந்த விலையாக ரூ.56.66 காசுக்கும், சராசரி விலையாக ரூ.86.99 காசுக்கும் விற்பனையானது. அனைத்து தர கொப்பரையும் விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post ரூ.2.91 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை appeared first on Dinakaran.

Tags : Omalur ,Omalur Regulation Hall ,
× RELATED ₹7 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்