×

பெரம்பலூரில் பாஜ எம்பியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

 

பெரம்பலூர்,மார்ச்15: பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி-எஸ்டி அணி சார்பாக வரும் பாராளுமன்றத் தேர்தலில் 400-இடங்களுக்கு மேல் வெற்றிபெற்றால் அம்பேத்கர் இயற்றிய சட்டத்தை மாற்றி அமைப்போம் என்று பேசிய பாஜ எம்பி ஆனந்தகுமார் ஹக்டேவை கண்டித்து நேற்று் காங்கிரஸ் எஸ்சி-எஸ்டி அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்திசிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங் கிரஸ் கமிட்டியின் எஸ்சி-எஸ்டி அணி தலைவர் தேவேந்திரன் தலைமை வகித்தார்.

மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ், நகரத் தலைவர் சேட்டு என்ற இப்ராஹிம், வட்டாரத் தலைவர்கள் ரங்கராஜ், விஜயகுமார், செந்தமிழ் செல்வன், பக்தோதின், சுப்பிரமணியன், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் ராணி, மாவட்ட துணைத் தலைவர்கள் ஆசைதம்பி, அருணாச்சலம், வழக்கறிஞர் பிரிவு தலைவர் ரஞ்சித் குமார், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் பாஜ எம்பியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Perambalur ,Congress SC-ST ,Anandakumar Hagde ,SC-ST ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சி...