×

மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம் மார்ச் 14: குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சேலம் அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில், குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அரசு கலைக்கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் டார்வின் தலைமை வகித்தார். அபிராமி, கோபால் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் கோகுல் கலந்து கொண்டு பேசினார். இதில், ஒன்றிய அரசை கண்டித்தும், சிஏஏ சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, ஒன்றிய மோடி அரசு சிஏஏ எனப்படும் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வகையில் இந்த சட்டம் உள்ளது. விவசாயிகள் போராட்டம், பொதுத்துறை விற்பனை, பெண்களுக்கான பாதுகாப்பின்மை, மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதிகள் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காமல் உள்ளார். எனவே, மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த கூடாது. உடனடியாக குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

 

The post மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Student Association ,SALEM ,INDIAN ,SALEM STATE COLLEGE OF ARTS ,Indian Student Association ,State College of Arts ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...