×

மங்கள காளியம்மன் கோயில் திருவிழா

ஆட்டையாம்பட்டி, மார்ச் 14: ஆட்டையாம்பட்டி அடுத்து பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள மங்களகாளியம்மன் கோயிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு பொங்கல் விழா நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம், செல்வவிநாயகர் கோயிலில் இருந்து, தீர்த்த குடம் மற்றும் அக்னி கரகம் ஊர்வலமானது முக்கிய சாலைகள் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தது. நேற்று காலை மங்களகாளியம்மன் மற்றும் கடகடப்பான் சுவாமிக்கு, பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து மலர்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post மங்கள காளியம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Mangala Kaliamman Temple Festival ,Attaiyambatti ,Pongal ,Masi festival ,Mangalakaliyamman Temple ,Paparapatti ,Selvavinayakar ,Tirtha Kodam ,Agni Karagam ,
× RELATED சாலை விபத்தில் பெயிண்டர் பலி