×

மாவட்டம் முழுவதும் 2.74 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து

சேலம், மார்ச் 5: சேலம் மாவட்டத்தில் 2.74 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் பாதிப்பை தடுக்கும் வகையில், ஆண்டிற்கு இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது போலியோ நோய் இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளது. இதனால் ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் 2,356 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள 2 லட்சத்து 74 ஆயிரத்து 435 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,“சேலம் சுகாதார மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 613 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 1 லட்சத்து 33 ஆயிரத்து 570 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 81 ஆயிரத்து 582 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதில் 77 ஆயிரத்து 257 குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல், சேலம் மாநகராட்சியில் 75 ஆயிரத்து 15 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதில் 63 ஆயிரத்து 608 குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கும் ேபாலியோ சொட்டு மருந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’என்றனர்.

The post மாவட்டம் முழுவதும் 2.74 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem district ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...