×
Saravana Stores

உபி பட்டியலின மாணவன் கொலையை கண்டித்து காங்கிரஸ் எஸ்சி துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

 

கோவை, மார்ச் 4: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் சோமேஷ் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்சி துறையினர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில எஸ்சி துறையினர் தலைவர் காந்தி தலைமையில் நடத்தினர்.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன், துணை தலைவரும் மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவருமான அழகு ஜெயபாலன், மாநில எஸ்சி துறை துணை தலைவர் மாரியப்பன், வடக்கு மாவட்ட எஸ்சி துறை தலைவர் பேரூர் ப.மயில், மாநில செயலாளர் விஜயகுமார், இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் நவீன்குமார், நகர தலைவர் தங்கமணி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆகாஷ்,

மாநில எஸ்சி துறை செயலாளர் கருப்புசாமி, ராஜா பழனிசாமி, இமாலயன், ஓபிசி மாநில செயலாளர் செந்தாமரை கண்ணன், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலாஜி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சக்தி சதீஷ், ரகமத்துல்லா, சாந்தி ஆனந்தகுமார், செல்வராஜ், சந்திரா, நல்லசாமி, சங்கர், ராஜம்மாள், மோகன், ரவி, கோவிந்தம்மாள், இந்திராணி, சித்ரா, உலகநாதன், தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post உபி பட்டியலின மாணவன் கொலையை கண்டித்து காங்கிரஸ் எஸ்சி துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress SC Department ,Coimbatore ,Somesh ,Uttar Pradesh ,
× RELATED கோவை, திருப்பூர், ஈரோட்டிலிருந்து 3...