- சிறுவாணி இலக்கிய விழா
- கோயம்புத்தூர்
- கோவை மாவட்ட பொது நூலக சங்கம்
- PSG
- கலை
- விஞ்ஞானம்
- கல்லூரி
- சிறுவாணி இலக்கிய விழா
- தின மலர்
கோவை, பிப். 23: கோவை மாவட்ட பொது நூலக இயக்கம் சார்பாக சிறுவாணி இலக்கியத் திருவிழா கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (24ம் தேதி) மற்றும் 25ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி நாளை காலை 9.30 மணிக்கு துவக்கிவைக்க உள்ளார்.
நாளை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பண்நாட்டு அரங்கம் என்ற கருத்துருவில் பெருமாள் முருகன், வலசை போகும் கதைகள் தலைப்பில் வேணுகோபால், மொழியின் நனவலி கவிதை தலைப்பில் ஷாஅ, நவீன கதைகளில் தொடை நயம் தலைப்பில் முனைவர் மைதிலி, கோவையில் நவீன நாடகச் செயல்பாடுகள் தலைப்பில் ரவிச்சந்திரன் அரவிந்தன், கடல் தாண்டும் கவிதைகள் தலைப்பில் மோகனரங்கன் உள்ளிட்ட பலர் பேசவுள்ளனர். மேலும், மாணவர்களின் கலை நிகழ்ச்சி, வினாடி வினா, நாடகம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
அதேபோல இந்நிகழ்ச்சியின் நிறைவுநாளான 25ம் தேதி தற்காலச் சூழலும் எதிர்கால தேவையும் என்ற தலைப்பில் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர். இதனைதொடர்ந்து அன்று மாலை 5.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கவுள்ளார்.
இதில், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பொது நூலக இயக்குனர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் அறிஞர்கள், தமிழ்மொழி பற்றாளர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
The post கோவையில் சிறுவாணி இலக்கிய திருவிழா appeared first on Dinakaran.