×

பெரம்பலூரில் சாரண இயக்கம் சார்பில் உலக சிந்தனை நாள் விழா

 

பெரம்பலூர்,பிப்.23: பெரம்பலூர் மாவட்ட பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பில் அதன் நிறுவனர் பிறந்த நாளை யொட்டி உலக சிந்தனை நாள் விழா கொண்டாடப்பட்டது. பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில் அதன் நிறுவனரான சர் ராபர்ட் பேடன் பவுல் பிறந்த நாளையொட்டி நேற்று உலக சிந்தனை நாள் விழாவாகக் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பெரம்ப லூர்- துறையூர் சாலையில் உள்ள மாவட்ட பாரத சாரண சாரணியர் பயிற்சி மையத்தில் சர் ராபர்ட் பேடன் பவுல் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் நமது உலகம் நமது வளமான எதிர்காலம் என்ற கோட்பாட்டிற்கு இணங்கி சர்வசமய வழிபாடு நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஆணையர் செல்வராசு தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் பிரகாஷ் மற்றும் வேப்பூர் மாவட்ட செயலாளர் தனபால் முன்னிலை வகித்தனர். இந்த வழிபாட்டில் ஆலம் பாடி அரசு ஆதி திராவிடர் உயர்நிலைப்பள்ளி, சிறு வாச்சூர் அரசு மேல்நிலை ப்பள்ளி, களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, பொம்மனப்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, பெரம் பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 95 சாரண சாரணி யர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட பயிற்சி ஆணையர் காம ராசு மற்றும் மாவட்ட பொரு ளாளர் குணாளன் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சாரண ஆசிரி யர்கள் தமிழரசி, பாஸ்கர், ரவி, ராஜா சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் சாரண இயக்கம் சார்பில் உலக சிந்தனை நாள் விழா appeared first on Dinakaran.

Tags : World Thought Day ,Sarana Movement ,Perambalur ,Bharat Sarana Saraniyar Movement ,Sir ,Robert Baden Paul ,World Thought Day Festival ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி