×

பெரம்பலூரில் 26ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்: பெரம்பலூர் கலெக்டர் தகவல்

 

பெரம்பலூர்,பிப்.23: பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வரும் 26ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல், சமூகத் தரவுகள் கணக் கெடுப்பில் விடுபட்டவர்களை சேர்த்தல், உதவி உபக ரணங்கள் வழங்குதல் ஆகிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

பெரம்பலுார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையைப் பெற ஆதார், குடும்ப அட்டை மற்றும் 4 புகைப் படத்துடனும், கணக்கெடு ப்பில் விடுபட்ட நபர்கள் மற்றும் உதவி உபகரணங் கள்பெற மாற்றுத்திறன ளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார், குடும்ப அட்டை, 1 புகைப் படத்துட னும் எடுத்து வரவேண்டும். இந்த முகாமினை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூரில் 26ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்: பெரம்பலூர் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur Collector ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...