×

விதிகளை மீறிய 1,845 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து

சேலம்: கடந்த ஓராண்டில் சாலை விதிகளை மீறிய 1,845 வாகன ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர். சாலை விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால், விபத்துக்களின் எண்ணிக்கை குறையவில்லை. சேலம் மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடந்த வாகன விபத்துக்கள், விபத்தை ஏற்படுத்தியவர்களின் வாகன உரிமம் ரத்து, அதிவேகமாக வாகனத்தை இயக்கியவர்கள், செல்போன் பேசியபடி வாகனத்ைத இயக்கியவர்களுக்கு அபராதம் எவ்வளவு விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு கூட்டத்தில் புள்ளி விபரம் அளித்துள்ளனர்.

The post விதிகளை மீறிய 1,845 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!