×

அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு: தேர்ச்சிபெறாத பயிற்சியாளர்கள் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

திருச்சி, பிப்.11: வருகிற மார்ச் 2024ல் நடைபெறவுள்ள அகில இந்திய துணைத் தொழிற்தேர்வில், தகுதியிருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத, தேர்ச்சிபெறாத பயிற்சியாளர்கள் வருகிற 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-2019-ல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு மார்ச் 2024-ல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

எனவே, துணைத்தேர்வு தொடர்பாக முன்னாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற் பயிற்சி நிலையங்களை பிப்.15ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக் கட்டணத்தை தொழிற்பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி செலுத்தி, வாய்ப்பினை பயன்படுத்தி துணைத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், அகில இந்திய துணைத் தொழிற் தேர்வு மார்ச் 2024, குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற http:/skilltraining.gov.in, ncvtmis.gov.in) ஆகிய இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தொிவித்துள்ளார்.

The post அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு: தேர்ச்சிபெறாத பயிற்சியாளர்கள் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : All India ,Trichchi ,All-India Sub-Industry Examination ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை