திருவெறும்பூர், பிப்.7: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வந்ததை நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டதோடு பொதுப்பணித்துறை அதிகாரிகளு அறிவுரைகள் வழங்கினார். தமிழக முதல்வர் உத்தரவுபடி கடந்த 3ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களுக்கு உயிர் தண்ணீர் வழங்க தண்ணீர் திறக்கப்பட்டது.
அந்த நீர் நேற்று (6ம் தேதி) அதிகாலை 3 மணியளவில் கல்லணை வந்தடைந்தது. பின்டெல்டா மாவட்டங்களுக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அவற்றை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் சுப்ரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் மதகுகளை பார்வையிட்டு தண்ணீரை பாதுகாப்பாக வெளியேற்றவும், முறையாக தண்ணீர் செல்வதை கண்காணிக்கும் படியும் அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின் போது காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திலீபன் மற்றும் கல்லணை உதவி பொறியாளர் திருமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post மேட்டூரில் திறக்கப்பட்ட நீர் கல்லணைக்கு வந்தடைந்தது appeared first on Dinakaran.