- உலக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்
- கோயம்புத்தூர்
- உலக புற்றுநோய் தினம்
- புற்றுநோய்க்காக ஓடுங்கள்
- தின மலர்
கோவை, பிப். 5: தனியார் அமைப்பு சார்பில் உலக புற்றுநோய் தினத்தையொட்டி ‘ரன் ஃபார் கேன்சர்’ என்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியை தனியார் அமைப்பினர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் 1 கிலோ மீட்டர், 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ. என்று 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு என போட்டிகள் நடந்தன. இதில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு மொத்தம் பரிசு தொகையாக ரூ.68 ஆயிரம் வழங்கப்பட்டது. 10 கிமீ போட்டி கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கி கேரளா கிளப், மகளிர் பாலிடெக்னிக் சென்று அண்ணா சிலை வழியாக ஓசூர் சாலை, ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க், ரெட்பீல்ட் வழியாக நிர்மலா கல்லூரியை அடைந்து, அங்கிருந்து யூ டர்ன் செய்து மீண்டும் ரெட் பீல்ட், தாமஸ் பார்க், மாவட்ட கலெக்டர் பங்களா வழியாக மீண்டும் நேரு ஸ்டேடியத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தனியார் அமைப்பினர் செய்திருந்தனர்.
The post உலக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் appeared first on Dinakaran.