×

பெரம்பலூரில் காவல் சிறுவர் மன்றம் சார்பில் வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மீன்சுருட்டியில் மாணவர்கள் விடுதி கட்டுமான பணி

 

ஜெயங்கொண்டம், ஜன.26: ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், குண்டவெளி ஊராட்சி, மீன்சுருட்டியில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர்கள் விடுதி புதிய கட்டிடம் ரூ 2.16 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணியை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உமாமகேஸ்வரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திருவருள், உதவி செயற்பொறியாளர் அன்பரசி, உதவி பொறியாளர் ஜெயந்தி, விடுதி காப்பாளர்(பொ) ஆனந்தன், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்.

மணிமாறன், ஒன்றிய குழு உறுப்பினர் ரேவதி சௌந்தர்ராஜன், குண்டவெளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி தெய்வமணி, திமுக பொதுக்குழு உறுப்பினர் .பொய்யாமொழி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் .ராஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் வீராசாமி,கிளை செயலாளர் அண்ணாதுரை மற்றும் அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

The post பெரம்பலூரில் காவல் சிறுவர் மன்றம் சார்பில் வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மீன்சுருட்டியில் மாணவர்கள் விடுதி கட்டுமான பணி appeared first on Dinakaran.

Tags : Police Children's Forum ,Perambalur ,JAYANGONDAM ,URATCHI UNION ,GANDAVELI URATCHI ,FISHSURUTI ,MP K. ,K. ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...