- திருமலபாடி வைத்தியநாத சுவாமி கோயில்
- அரியலூர்
- திருமலபாடி வைத்தியநாத சுவாமி கோயில்
- ராஜகோபுரம்
- திருமலூர்
- மாவட்டம் வைதியநாத சுவாமி கோயில்
- திருமலூர் பாடி வைதியாநாத சுவாமி கோயில்
அரியலூர்,ஜன.5: திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயிலில் இருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலின் ராஜகோபுரம் முன்பு கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தகர கொட்டகை அமைக்கப்பட்டது. இதேபோல், கோயிலின் உட்பகுதியிலும் தகரக் கொட்டகை அமைக்கப்பட்டது. இவைகள் பக்தர்களுக்கு ஒரு விதத்தில் பயனாக இருந்தாலும், கோபுரங்களில் உள்ள சிற்பங்களை மறைக்கும் வகையில் இருந்தது.
இதன் காரணமாக அதே கிராமத்தை சேர்ந்த சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்களை மறைக்கும் விதமாக உள்ளதால், தகர கொட்டகைகளை அகற்ற நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகராஜ், இணை ஆணையர் பரணிதரன், கோயில் நிர்வாக அலுவலர் மணிவேலன், தனி தாசில்தார் (ஆலய நிலங்கள்) கலைவாணன் ஆகியோர் திருமானூர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் தகர கொட்டகைகளை அகற்றினர்.
The post அரியலூர் அடுத்துள்ள திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் முன் ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.