×
Saravana Stores

ஓசூர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு

ஓசூர், டிச.30: ஓசூர், சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. வெள்ளை போர்வை போர்த்தியது போல பனிமூட்டம் நிலவுவதால், பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு கடும் சிரமத்திற்கு இடையே வாகனங்களை இயக்கிச் செல்கின்றனர். தொடர்ந்து மூடுபனி காணப்படுவதோடு தூரலை போன்ற பனியும் பொழிகிறது. இதனால், கடுமையான குளிரால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். ஓசூர், சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் சூளகிரியை சுற்றியுள்ள கிராம பகுதியில் ேநற்று காலைப் பொழுதில் அதிகளவில் பனியின் தாக்கம் காணப்பட்டதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. காலை 8 மணியளவிலும் சூரியன், நிலவை போல காட்சியளித்தது. பனிப்பொழிவு அதிகரித்திருப்பதால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பொதுமக்கள் பனியால் சிரமத்திற்குள்ளாகி ஸ்வெட்டர், குல்லா அணிந்து செல்கின்றனர்.

The post ஓசூர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு appeared first on Dinakaran.

Tags : Hosur ,Chulagiri ,Bengaluru-Krishnagiri National Highway ,Dinakaran ,
× RELATED மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய ஆசிரியர்!!