×

சென்னையில் ஆவின் பால் விநியோகம் சீரானது; தட்டுப்பாடின்றி பால் விநியோகம்: ஆவின் நிர்வாகம்

சென்னை: சென்னையில் ஆவின் பால் விநியோகம் சீரானது; பல்வேறு இடங்களில் தட்டுப்பாடின்றி பால் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பால் தட்டுப்பாடு என்று பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை என்று ஆவின் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்தும் பால் பாக்கெட்டுகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு முழு வீச்சில் விநியோகம் செய்யப்படுகிறது. அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் பண்ணைகளில் பால் பேக்கிங் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post சென்னையில் ஆவின் பால் விநியோகம் சீரானது; தட்டுப்பாடின்றி பால் விநியோகம்: ஆவின் நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Aavin ,Dinakaran ,
× RELATED ஆவின் ஐஸ்கிரீம்களின் விலையை ரூ. 2 முதல் ரூ. 5 வரை உயர்த்தியது ஆவின் நிறுவனம்!