×

கன மழையால் வரத்து குறைந்தது; கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் உயர்வு: பூக்கள் விலை சரிந்தது


அண்ணாநகர்: சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக மிக அதிக அளவில் மழை பெய்ததால் கோயம்பேடு காய்கறி, பூ, பழம் ஆகிய மார்க்கெட் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறைந்தது. தொடர் மழையால் சென்னை மற்றும் புறநகர் சில்லரை வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வராததால் விற்பனையாகாமல் அனைத்து காய்கறிகளும் தேக்கம் அடைந்தன. இந்நிலையில் நேற்று மழை சற்று குறைந்தது. ஆனால் கோயம்பேடு மார்க்கெட் சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் காய்கறி வாகனங்கள் உள்ளே வரவில்லை. இதன் காரணமாக அவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது.

ஒரு கிலோ வெங்காயம் 60க்கும், சின்ன வெங்காயம் 110, தக்காளி 40, பீன்ஸ் 50, வெண்டைக்காய் 45, பீட்ரூட் 45, சவ்சவ் 12, முள்ளங்கி 35, முட்டைகோஸ் 10, வெண்டைக்காய் 45, கத்தரிக்காய் 40, காராமணி 40, பாகற்காய் 30, சுரக்காய் 35, சேனைக்கிழங்கு 45, முருங்கைகாய் 90, சேமகிழங்கு 30, காலிபிளவர் 25, வெள்ளரிக்காய் 20, பட்டாணி 50, இஞ்சி 90, பீர்க்கங்காய் 40, எலுமிச்சைபழம் 90, நூக்கல் 25, கோவக்காய் 40, கொத்தவரங்காய் 40, குடைமிளகாய் 80க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் முத்துகுமார் கூறும்போது, ‘‘மழையால் காய்கறிகளை வாங்குவதற்கு சென்னை மற்றும் புறநகர் வியாபாரிகள் வராததால் விற்பனை சரிந்தது. நேற்று காலை வரத்து குறைவால் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது’’ என்றார்.

இதேபால, ஆந்திரா, ஓசூர், கடப்பா மற்றும் திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து கனகாம்பரம், சாமந்தி, சம்பங்கி, பன்னீர் ரோஸ், சாக்லேட் ரோஸ் ஆகிய பூக்களும் அதேபோல மல்லி, முல்லை மற்றும் ஜாதிமல்லி ஆகிய பூக்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தும் தினமும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது. ஒரு கிலோ மல்லி மற்றும் கனகாம்பரம் 700க்கும் ஐஸ் மல்லி 500க்கும் முல்லை மற்றும் ஜாதிமல்லி 400க்கும் அரளி பூ 150க்கும் சாமந்தி 100க்கும் சம்பங்கி 50க்கும் பன்னீர் ரோஸ் 30க்கும் சாக்லேட் ரோஸ் 40க்கும் விற்பனை செய்யப்பட்டது.

The post கன மழையால் வரத்து குறைந்தது; கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் உயர்வு: பூக்கள் விலை சரிந்தது appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Mijam ,Chennai ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...