×

‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு நிவாரண பணிகளை மேலும் தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்கள் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் நிவாரண பணிகளை மேலும் தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்கள் நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
‘மிக்ஜாம்’ புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழை பாதிப்பு காரணமாக, சென்னை நகரில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சர்களை நியமித்து கடந்த 4ம் தேதி உத்தரவிடப்பட்டது. இப்பணிகளை மேலும் தீவிரப்படுத்த ஏற்கனவே நியமிக்கப்பட்ட அமைச்சர்களுடன், பின்வரும் கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கே.கே. நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளுக்கும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ராயபுரம் பகுதிக்கும், ஏற்கனவே நியமிக்கப்பட்ட பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளுடன் கூடுதலாக அரும்பாக்கம் பகுதிகளுக்கும்,

மேலும், சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணித்து, அலுவலர்களுக்கு மீட்பு பணிகளுக்கு தேவையான உத்தரவுகளை வழங்கி, மீட்பு மற்றும் நிவாரண பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுடன், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான செய்திகளை சேகரித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைத்து மீட்பு பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மற்றும் எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோரை திருவொற்றியூர் பகுதிக்கு நியமித்து நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு நிவாரண பணிகளை மேலும் தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்கள் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Miqjam ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Tamil Nadu ,M. K. Stalin ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...