சென்னை: மிக்ஜாம் புயல் எச்சரிக்கை தொடர்பாக வருவாய்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. படகுகளை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமானம் ரத்து காரணமாக பாதிக்கப்படும் பயணிகளுக்குத் தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும். இன்று மாலை முதல் நாளை மாலை வரை கனமழை இருக்கும். பொதுமக்கல் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். ரயில், விமானம் ரத்து காரணமாக பாதிக்கப்படும் பயணிகளுக்கு தேவையான உதவிகள் செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளார்.
The post தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறையா?.. அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.
