×

தேர்தல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர் அமைப்பில் இணைந்த பிரபல நடிகை

பாட்னா: பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பீகார் மாநிலத்தில் ஜன் சுராஜ் என்ற அரசியல் அமைப்பை நடத்தி வருகிறார். மேலும் மாநிலம் முழுவதும் அவர் பாத யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது கட்சியில் நேற்று போஜ்புரி நடிகை அக்‌ஷரா சிங் என்பவர் இணைந்தார். இதுபற்றி நடிகை அக்‌ஷரா சிங் கூறுகையில்,’ தேர்தலில் போட்டியிடும் ஆசை எனக்கு இருந்திருந்தால், அனைத்து அரசியல் கட்சிகளிலும் இருக்கும் எனது ஏராளமான நலம் விரும்பிகளை அணுகியிருக்கலாம். ஆனால், வளர்ந்த பீகாரைக் காண வேண்டும் என்பதே எனது கனவு. இதற்காக இந்த அமைப்பில் இணைந்தேன்’ என்றார்.

The post தேர்தல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர் அமைப்பில் இணைந்த பிரபல நடிகை appeared first on Dinakaran.

Tags : Prashant Kishore ,Patna ,Jan ,Suraj ,Bihar ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்த...