×

சென்னை அடையாறில் நடைபயிற்சியின் போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உரையாடிய முதியவர்: அறநிலையத்துறை அம்சமாக செயல்படுவதாக புகழாரம், சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

சென்னை: சென்னை அடையாறில் நடைபயிற்சியின் போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், முதியவர் ஒருவர் உரையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அடையாறில் உள்ள தியோசோபிக்கல் சொசைட்டியில் தினமும் காலையில் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். நடைபயிற்சியின் போது அங்கு வாக்கிங் செல்வோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பது வழக்கம். அப்போது அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சகஜமாக பேசுவது வழக்கம். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

மேலும் பலர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்வதும் உண்டு. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 22ம் தேதி வாக்கிங் சென்றார். அப்போது அப்­ப­கு­தி­யைச் சேர்ந்த, கனரா வங்­கி­யின் ஓய்வு பெற்ற உதவி பொது­மே­லா­ளர் ஏ.வெங்­கட்­ரா­மன் என்பவர் முதல்­வர் மு.க.ஸ்டாலினை வழி­யில் சந்­தித்­தார். அப்­போது அவர் முதல்­வரிடம், ‘‘சார் ஒரு நிமிஷம்.. என் கருத்தை கூறலாமா..’’ என்று கேட்டார். உடனே முதல்­வர் மு.க.ஸ்டாலின், ‘‘சொல்லுங்க..’’ என்­றார்.
உடனே வெங்கட்ராமான், ‘‘ரொம்ப பிர­மா­தமா இருக்­கு­ சார் உங்க நிர்­வா­கம்.

சிலர் சொல்­றாங்க, நீங்க டெம்­பி­ளுக்கு ஒண்­ணும் பண்­ற­தில்­லைன்னு. ஆனால் உங்க அட்­வைஸ்ல சேகர்­பாபு அழகா பண்ணி அதுக்கு இன்­கம்­லாம் வர­வைக்­கி­றார். இந்து சமய அற­நி­லை­யத்­துறை மிகச்­சி­றப்­பாக செயல்­ப­டு­து. இதை நான் மட்­டும் சொல்­ல­வில்லை. எல்­லோ­ரும் சொல்­றாங்க. சேகர்­பாபு கோயி­லுக்கு வரு­மா­னத்தை அதி­க­ரித்து இருக்­கி­றார். கோயி­லுக்­குச் சொந்­த­மான நிலங்­களை யாரோ ஆக்­கி­ர­மித்து வைத்து இருக்­கி­றார்­கள். அதனை எல்­லாம் மீட்­டுக் கொடுத்து இருக்­கி­றார். இந்த மாதிரி எல்­லாம் யாரும் இது­வரை செய்­த­தில்லை’’ என்றார்.

இதற்கு முதல்­வர் மு.க. ஸ்டாலின், ‘‘ஆமா.. ஆமா.. இன்­னைக்கு அமைச்­சர் சேகர்­பாபு ஒரு பேட்­டி­யில் கூட இதுக்கான பதிலை நன்­றாக சொல்லி இருக்கார்..’’ என்றார். வெங்­கட்­ரா­மன் தொடர்ந்து பேசுகையில், ‘‘கோயிலில் நிறைய நடக்­கி­றது. குறிப்­பா கும்­பா­பி­ஷே­கம் அதி­க­மாக நடை­பெ­றுது. முன்­பெல்­லாம் கும்­பா­பிஷே­கமே கிடை­யாது – 10 வரு­சமா. இப்­போ ஆயி­ரம் கும்­பா­பிஷே­கங்­கள் நடை­பெற்று ஆயிரத்தோராவது கும்­பா­பி­ஷே­கம் நடை­பெற இருக்­கின்­றது… நமஸ்­கா­ரம்’’ என்கிறார். இவ்­வாறு உரையாடல் நடந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post சென்னை அடையாறில் நடைபயிற்சியின் போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உரையாடிய முதியவர்: அறநிலையத்துறை அம்சமாக செயல்படுவதாக புகழாரம், சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Adyar, Chennai ,CHENNAI ,Chennai Adyar ,Tamil Nadu ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...