×

சேரி மொழியில் பேசத் தெரியாது என நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விவகாரம்: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக புகார்..!!

சென்னை: சேரி மொழியில் பேசத் தெரியாது என நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குஷ்பு மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது நடவடிக்கை எடுக்காத தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, த்ரிஷாவுக்காக குரல் கொடுப்பதாக கூறி, எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு நபர் விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த குஷ்பூ, தங்களைப்போல், சேரி மொழியில் தன்னால் பேசமுடியாது என்று பதிவிட்டிருந்தார். அவரின் அந்தப் பதிவில், ‘சேரி மொழி’ என குறிப்பிடப்பட்டிருந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்த குஷ்பூ, பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பேன். பிரெஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்பதை பயன்படுத்தினேன் என விளக்கம் கொடுத்துள்ளார். இதனிடையே நேற்று குஷ்புவின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸின் பட்டியலினப் பிரிவு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர் பொது மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் குஷ்பு மீது இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. மனுவில், நடிகை குஷ்பு அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் சேரி மொழியில் பேசத் தெரியாது என கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரது கருத்து மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. சேரியில் பேசுகின்ற மொழி என்ற வன்மம் கொண்ட மொழி என்றும் தீண்ட தகாத மொழி என்றும் பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நடிகை குஷ்பு மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சேரி மொழியில் பேசத் தெரியாது என நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விவகாரம்: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Khushbu ,X ,Chennai Police Commissioner ,CHENNAI ,Khushbu X ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...