×

திருச்சி மாவட்ட எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும்: ஐகோர்ட் கிளை

திருச்சி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருச்சி மாவட்ட எஸ்.பி. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மக்களுக்கான திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அரசின் ஒரு திட்டத்தில் முறைகேடு நடந்தால் உயரதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

The post திருச்சி மாவட்ட எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும்: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : Trichy District S.P. ,iCourt ,Trichy ,district SP ,Madurai ,Trichy District S.B. ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பை முறையாக ஆய்வுசெய்ய ஐகோர்ட் கிளை ஆணை..!!