காஞ்சிபுரம்: புதுச்சேரியில் நடந்த ரத்ததான முகாமில், சபாநாயகர் ஏம்பலம் ஆர்.செல்வம் பங்கேற்று, தொடர்ந்து ரத்ததானம் செய்த வந்த காஞ்சிபுரம் மாவட்ட மருந்தாளர் வே.பழனிவேலனுக்கு விருது வழங்கினார். புதுச்சேரி உதவும் பேரியக்கம், அமெச்சூர் ஜிப்மர் கேரம் அசோசியேஷன், லயன்ஸ் கிளப் ஆப் பாண்டிச்சேரி அசோசியேஷன் ஆகியவை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் புதுச்சேரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் ஆர்.செல்வம் கலந்துகொண்டு, தொடர்ந்து ரத்ததானம் செய்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குநரும், அலுவலக மாவட்ட மருந்தாளருமான வே.பழனிவேலனை பாராட்டி, குறுதி கொடை வள்ளல் 2023 என்ற விருதை வழங்கினார். நிகழ்வின்போது உதவும் பேரியக்கத்தின் தலைவர் புதுவை குமார், புதுச்சேரி எம்எல்ஏ நேரு, மாவட்ட ஆளுநர் கோபி கிருஷ்ணா, புதுவை கலை பண்பாட்டு துறை நிர்வாகி கலியபெருமாள், ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் வடிவேல், நிர்வாகிகள் வெற்றி செல்வம், பிரியா, சுந்தர்ராஜன், கோஜொரியோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post தொடர்ந்து ரத்ததானம் செய்த காஞ்சிபுரம் மாவட்ட மருந்தாளருக்கு விருது: புதுச்சேரி சபாநாயகர் வழங்கினார் appeared first on Dinakaran.
