- தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி
- காஞ்சிபுரம்
- ஃபர்ஹீன் பாத்திமா
- தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- மாமல்லபுரத்தில்
காஞ்சிபுரம், ஜன.12: மாமல்லபுரத்தில் அமைந்துள்ள தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பி.டெக் தகவல் தொழில்நுட்பம் (3ம் ஆண்டு) பயிலும் மாணவி பார்ஹீன் பாத்திமா, தேசிய அளவிலான சீனச் சண்டை கலைகளில் அடிப்படை கொண்ட உடல் திறன் விளையாட்டு போட்டிகளில் (வுஷூ) சிறப்பாக செயல்பட்டு, கல்லூரிக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கடந்த மாதம் சத்தீஸ்கரில் நடைபெற்ற 9வது ஆம் பெடரேஷன் கப் தேசிய வுஷு போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக அவர், நஞ்சாக்ஸ் மற்றும் குழு போட்டி பிரிவுகளில் 2 தங்க பதக்கங்களையும், விங் சுன் பிரிவில் 1 வெள்ளி பதக்கத்தையும் வென்று, தமிழ்நாடு அணியின் மொத்த சாம்பியன் பட்டம் பெறுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
இதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 34ம் சீனியர் தேசிய வுஷு போட்டி பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றதன் மூலம், தனது சாதனைகளை மேலும் உயர்த்தினார். இவ்வாறு சாதனை புரிந்த மாணவியை, தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி நிர்வாக இயக்குநர், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ – மாணவிகள் பாராட்டி வாழ்த்தினர்.
