×

கரூரை சேர்ந்த பெண்ணிடம் ரூ.10.64 லட்சம் ஆன்லைன் மோசடி

கரூர், நவ.18: கரூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கரூரைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஆகஸ்ட் 4ம்தேதி முதல் 17ம்தேதி வரை டெலிகிராமில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி பிரிஷா என்ற பெண், கரூரைச் சேர்ந்த நபரின் முழு முகவரியை பெற்றுக் கொண்டு, யூடியூப்பில் சப்ஸ்கிரைப் செய்வதற்கு ரூ. 50 வீதம் வழங்கப்படும்.

இடையே டாஸ்க் வரும் எனவும் அதில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி டாஸ்க் முடிந்தவுடன் நாம் செலுத்திய தொகை மற்றும் லாபம் பெற்றுக் கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி ஆன்லைன் மூலம் நம்பிக்கை மோசடி செய்து, தன்னிடம் இருந்து ரூ. 10லட்சத்து 64 ஆயிரத்து 20 பெற்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், கரூர் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டதில் திண்டுக்கல்லை சேர்ந்த பாலாஜிராகவன், வேலூர் பணப்பாக்கத்தை சேர்ந்த மோகன்குமார் ஆகிய இருவரும் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

எனவே, இதன் மூலம் பொதுமக்கள் யாரும், பேஸ்புக், யூடியூப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் ஜாப், ஆன்லைன் டிபபரேபபடிங், பணத்தை இன்வெஸ்ட் செய்து, டாஸ்க் கம்ப்ளீசன் முடித்தால் அதிக லாபம் பெறலாம் என்பன போன்ற போலியாக வெப்சைட்டுக்களை நம்பி ஏமாற வேண்டும்.  இதுபோன்று ஏமாற்றும் நபர்களை நம்ப வேண்டாம். அவ்வாறு எதுவும் நடைபெற்றால் தாமதிக்காமல் கரூர் சைபர் க்ரைம் இலவச அழைப்பு எண்ணான 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என எஸ்பி பிரபார் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

The post கரூரை சேர்ந்த பெண்ணிடம் ரூ.10.64 லட்சம் ஆன்லைன் மோசடி appeared first on Dinakaran.

Tags : Karur ,District ,Cyber Crime ,Police Station ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...