×

தேவாரம் பகுதிகளில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் 25,26ம் தேதிகளில் நடக்கிறது

 

தேவாரம், நவ. 15: இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, அக்.27ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.இதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நவ. 4, 5 மற்றும் 18, 19ல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் 4, ல் சிறப்பு முகாம் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நவ. 18, 19ல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நவ.18 வேலை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளதால் நவ.18, 19 ல் நடைபெறவிருந்த சிறப்பு முகாம்களின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு பதிலாக நவ. 25,26 ல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான மனுக்களை தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேவாரம் பகுதிகளில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் 25,26ம் தேதிகளில் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Devaram ,Election Commission of India ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை