×

பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி: பொருளாதார குற்றப்பிரிவு குற்றவாளிகள் மீது குண்டாஸ்?.. சட்ட நிபுணர்களுடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆலோசனை..!!

சென்னை: பொருளாதார குற்றப்பிரிவு குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சட்ட நிபுணர்களுடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்து பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா? என ஆலோசனை நடத்தப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. காவல் ஆணையர், மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக குண்டர் சட்டம் போடுவதற்கு பொருளாதார குற்றப்பிரிவு திட்டமிட்டுள்ளது.

ஆருத்ரா, ஐஎஃப்எஸ், ஹிஜாவு உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் 20 பேர் மீது குண்டர் சட்டம் போடும் வகையில் பட்டியல் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களிடம் திட்டமிட்டு பணத்தை மோசடி செய்யும், பொருளாதார குற்றப்பிரிவு குற்றவாளிகள் கடும் சட்டத்தில் தண்டிக்கப்படுவதன் மூலம் குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பட்டிருக்கிறது. சட்ட நிபுணர்களின் ஆலோசனை அறிக்கையின்படி அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி: பொருளாதார குற்றப்பிரிவு குற்றவாளிகள் மீது குண்டாஸ்?.. சட்ட நிபுணர்களுடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...