×

முன்னாள் அமைச்சர் வளர்மதி விடுதலை எதிர்த்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு: டிசம்பர் 4ல் வாதங்களை தொடங்க உத்தரவு

சென்னை: கடந்த 2001-06ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வளர்மதி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எண்ணிடும் நடைமுறைகள் முடிந்துவிட்ட நிலையில் அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. வழக்கு குறித்த சில ஆவணங்களை பதிவுத்துறையிடமிருந்து பெறவேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, வழக்கின் விசாரணையை டிசம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் வழக்கில் வாதங்களை தொடங்க வேண்டுமென்று வளர்மதி தரப்புக்கு உத்தரவிட்டார்.

The post முன்னாள் அமைச்சர் வளர்மதி விடுதலை எதிர்த்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு: டிசம்பர் 4ல் வாதங்களை தொடங்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,minister ,Walarmati ,Chennai ,Social Welfare Department ,Supreme Court ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...