×

கட்டிட கட்டுமான அனுமதி கட்டணத்தை குறைக்க வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநராட்சி, சென்னையில் 1000 சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100 சதவிகிதம் உயர்த்தி இருக்கிறது. வீடு, கல்வி நிறுவனங்கள், வணிகம், தொழிற்சாலைகளின் தளபரப்பு குறியீட்டில் 100 சதுர மீட்டருக்கு (1076அடி) மேல் கட்டிட பரப்பு இருந்தால் கட்டிடங்களுக்கான அனுமதி கட்டணம் 100 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதில் குடியிருப்பு மற்றும் கல்வி கட்டிடங்களை பொருத்தவரை 1 முதல் 40 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ90, தற்பொது ரூ.180, 41 முதல் 100 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.155, தற்பொழுது ரூ.310, 101 முதல் 400 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.410, தற்பொழுது ரூ.820, 401 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் 10 சதுர மீட்டருக்கு ரூ.1,050 தற்பொழுது ரூ.2,100 என உயர்ந்து இருக்கிறது. இந்த கட்டண உயர்வு மக்களின் மீது சுமையை ஏற்றுவதாகவே உள்ளது. எனவே, சென்னை மாநகராட்சி உயர்த்திய இந்த கட்டணத்தை மறுபரிசீலனை செய்து, மக்களை பாதிக்காதவாறு அவற்றை குறைக்க வேண்டும்.

The post கட்டிட கட்டுமான அனுமதி கட்டணத்தை குறைக்க வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,Chennai Corporation ,CHENNAI ,TAMACA ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...