×

மின் இணைப்பு துண்டிப்பு என்ற குறுஞ்செய்தி மோசடியானது: மின்வாரியம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: ஈ.பி. பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வரும் குறுஞ்செய்தி ஒரு மோசடி மெசேஜ். இந்த குறுஞ்செய்தி வந்தால் பதற்றம் அடைய வேண்டாம், உங்கள் பில் நிலைப்பாட்டை மின்வாரிய இணையதளத்தில் சரி பார்க்கவும். குறிப்பாக அந்த எண்ணை தொடர்பு கொள்ளவோ, இணைய லிங்க்கை கிளிக் செய்யவோ வேண்டாம். உடனடியாக 1930 ஐ அழைத்து புகார் அளிக்கவும். உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும். மேலும் சைபர் க்ரைம் இணையதளம் மற்றும் டிவிட்டரில் புகார் அளிக்கலாம்.

The post மின் இணைப்பு துண்டிப்பு என்ற குறுஞ்செய்தி மோசடியானது: மின்வாரியம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Power ,CHENNAI ,Tamil Nadu Power Board ,Twitter ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...