×

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிவரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு


சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி லலிதா வெளியிட்டார். சென்னை, ரிப்பன் கட்டட கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முன்னிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கியுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி லலிதா வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) குலாம் ஜிலானி பாபா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். சென்னை மாவட்டத்தில் 3,719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஏற்கனவே கடந்த ஜனவரி 5ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலின்படி ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19,09,512, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19,71,653, இதர வாக்காளர்களின் எண்ணிக்கை 1,112, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 38,82,277 ஆகும். அதேபோல், நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 16,935 ஆண் வாக்காளர்கள், 17,911 பெண் வாக்காளர்கள், 20 இதர வாக்காளர்கள் என மொத்தம் 34,866 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், 24,536 ஆண் வாக்காளர்கள், 24,415 பெண் வாக்காளர்கள் மற்றும் 12 இதர வாக்காளர்கள் என மொத்தம் 48,963 வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில் 19,09,911 ஆண் வாக்காளர்கள், 19,65,149 பெண்வாக்காளர்கள் மற்றும் 1,118 இதர வாக்காளர்கள் என மொத்தம் 38,68,178 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. வாக்காளர் எண்ணிக்கை குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் 1,70,254 வாக்காளர்களும், அதிக பட்சமாக வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் 3,07,460 வாக்காளர்களும் உள்ளனர்.

The post சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிவரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai district ,Chennai ,District Electoral Officer ,Lalita ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...