×

கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி பொறியியல் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

திருச்சி: முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொறியாளர் அணி சார்பில் பொறியியல் மாணவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப் போட்டி நேற்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற இப்போட்டிக்கு மத்திய மாவட்டம் திமுக பொறியாளர் அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் புருஷோத்தமன், பொறியாளர் அணி மாவட்ட தலைவர் ஆலங்குடி இளங்கோவன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். இதில் பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி பொறியியல் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Centenary Elocution ,Trichy ,Muthamij ,
× RELATED ஆகஸ்ட் 24, 25ம் தேதிகளில் பழனியில்...