×

ஆலம்பாடி அரசு பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா

 

பெரம்பலூர்,அக்.13: ஆலம்பாடி அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. பெரம்பலூர் அருகேயுள்ள ஆலம்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா நேற்று (11ம்தேதி) மாலை 3 மணிக்கு நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர் மஞ்சுளா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் புஷ்பலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் சன்னாசி கலந்துகொண்டு மாணவர்களுக்கு, இலக்கியத்தில் இருந்து தமிழ் ஆர்வத்தை தூண்டும் விதமாக பல பாடல்களை பாடினார். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களை பரிசளித்தார். விழாவில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், மாணவ மாணவியர் திரளாகக் கலந்து கொண்டனர்.முன்னதாக பள்ளி தமிழாசிரியர் நாகராஜன் வரவேற்றார்.முடிவில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

The post ஆலம்பாடி அரசு பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா appeared first on Dinakaran.

Tags : Tamil Literary Forum Festival ,Alampadi Government School ,Perambalur ,Tamil Literary Forum ,Alambadi ,Government Adi Dravidar ,Health High School ,Perambalur… ,Alambadi Government School ,
× RELATED பெரம்பலூரில் 26ம் தேதி மாற்றுத்...