×

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான குமுளூர் அறிவழகன் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதி உதவி

 

லால்குடி,அக்.13: அரியலூர் அருகே வெடி விபத்தில் பலியான குமுலூர் அறிவழகன் குடும்பத்திற்கு ரூ.3லட்சம் நிதி உதவியை லால்குடி தாசில்தார் விக்னேஷ் வழங்கினார். அரியலூர் மாவட்டம் மாவட்டம் வெற்றியூரில் நடந்த பட்டாசு ஆலையில் லால்குடி அருகே உள்ள குமுளூர் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகன் அறிவழகன் பணிபுரிந்து வந்துள்ளார். சமீபத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் பலியானார்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியாைன குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார். அதன் பேரில் லால்குடி தாசில்தார் விக்னேஷ், குமுளூர் கிராமத்தில் உள்ள அறிவழகன் மனைவி செல்வகுமாரி மற்றும் மகள் வெண்ணிலா ஆகியோரிடம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதில் கிராம நிர்வாக அலுவலர் சங்கரலிங்கம், வருவாய் ஆய்வாளர் பார்வதி ஆகியோர் உடனிருந்தனர்.

The post பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான குமுளூர் அறிவழகன் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதி உதவி appeared first on Dinakaran.

Tags : Kumulur Virajhagan ,Lalgudi ,Kumulur Vijazhakan ,Ariyalur ,
× RELATED லால்குடி அருகே நந்தியாற்று வெள்ளப்பெருக்கால் சாலை துண்டிப்பு!!