×

உறுப்பு தானம் தூய்மைக் காவலர் உடலுக்கு அரசு மரியாதை

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே முகவூரை சேர்ந்தவர் மாரியப்பன் (45). இவர் முத்துசாமிபுரம் ஊராட்சியில் தூய்மை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 7ம் தேதி சாலை விபத்தில் படுகாயமடைந்த இவர், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார். உறவினர்கள் சம்மதத்துடன் இவரது உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகிய உறுப்புகள் மதுரை மற்றும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டது. அவரின் உடலுக்கு அரசின் சார்பில் கலெக்டர் ஜெயசீலன், உள்ளிட்ட அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

The post உறுப்பு தானம் தூய்மைக் காவலர் உடலுக்கு அரசு மரியாதை appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Mariyappan ,Makavoor ,Rajapalayam, Virudhunagar district ,Muthusamipuram ,government ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...