×

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு அதிமுக மாஜி அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நாட்டார்மங்கலத்தில் கடந்த மார்ச் 7ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்திலும், மார்ச் 10ம் தேதி ஆரோவில் பகுதியில் நடந்த கூட்டத்திலும் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி., தமிழ்நாடு அரசு பற்றியும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றியும் அவதூறாக பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் மீது அரசு தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியன் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி பூர்ணிமா, அக்.9ம் தேதி (நேற்று) சி.வி.சண்முகம் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.வி.சண்முகம் எம்.பி. நேரில் ஆஜரானார். பின்னர் விசாரணையை நவம்பர் 6ம் தேதிக்கு நீதிபதி பூர்ணிமா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு அதிமுக மாஜி அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : ADMK ,minister ,Chief Minister ,Villupuram ,AIADMK ,Natarmangalam ,Senchi ,Villupuram district ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...