×

திண்டிவனம் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி சாலையில் ஆறாக ஓடிய ஆசிட்

திண்டிவனம்: ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து 30 டன் சல்பியூரிக் ஆசிட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி, புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை மன்னார்குடியை சேர்ந்த அறிவழகன்(38) ஓட்டி சென்றார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் வேகமாக வந்த அரசு விரைவு பஸ், பைக் மீது மோதி, பின்னர் டேங்கர் லாரியின் பின்புறம் அதிவேகமாக மோதியது. இதில் லாரியிலிருந்த சல்பியூரிக் ஆசிட் சாலையில் ஆறாக வழிந்தோடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஒலக்கூர் போலீசார், அவ்வழியாக சென்ற வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர். பொதுமக்களை பாதுகாப்புடன் செல்ல அறிவுறுத்தி சாலையில் வழிந்தோடிய ஆசிட்டை ஓடையில் விட்டனர்.

The post திண்டிவனம் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி சாலையில் ஆறாக ஓடிய ஆசிட் appeared first on Dinakaran.

Tags : Thindivanam ,Nellore ,Puducherry ,Tindivanam ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...