
திருவண்ணாமலை: திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவண்ணாமலை நகரில் உள்ள வீடுகளில் தினந்தோறும் பெறப்படும் வீடுகள் நகராட்சியின் சார்பில் பெறப்பட்டு திடலில் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பல பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை பெறுவதில்லை என்று புகார் எழுந்துள்ளன. இதனால் பல சாலையோரம் குப்பைகளை கொட்டுவதால் பல இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தேரடி வீதி, திருமஞ்சன கோபுர வீதி, அணைகட்டி வீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் குப்பை மலைபோல தேங்கியுள்ளது. இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதேபோல தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. கானாவிளக்கு பகுதியில் இருந்து கொல்லம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகள் அகற்றப்பட்டாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கூறுகின்றன. பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள் அதிகம் இருப்பதால் அந்த பகுதியினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, சிலர் இரவு நேரத்தில் குப்பைகளில் தீவைத்து விடுகின்றனர். இதனால் அங்கு கரும்புகை சூழ்ந்து வாகனம் ஓட்ட முடியாத நிலை ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
The post திருவண்ணாமலையில் சாலையோரங்களில் மலைபோல தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற மக்கள் கோரிக்கை..!! appeared first on Dinakaran.