×

300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு கலைஞர் நூற்றாண்டு விழா அக்.7ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூர், செப். 29: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வரும் அக்.7ல் கும்பகோணத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் தீபக் ேஜக்கப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியன இணைந்து நடத்தும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வரும் அக்.7ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை, சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் வளாகத்தில் நடத்தப்பட உள்ளது.

இம்முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. முகாமில் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங், பி.இ., கல்வி தகுதி உடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மேலும், வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆள்சேர்ப்பும் நடைபெறுகிறது.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கான பதிவு மற்றும் ஆலோசனை, சுயத்தொழில் தொடங்குவதற்கு உரிய வழிகாட்டுதல், ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வேலையளிப்போர், வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம். இதுதொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு கலைஞர் நூற்றாண்டு விழா அக்.7ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Community Baby Shower Centenary ,Thanjavur ,Kumbakonam ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை