- அம்பத்தூர் தொழில்துறை எஸ்டேட்
- அம்பத்தூர்
- அம்பத்தூர் தொழிற்பேட்டை நகராட்சி போக்குவரத்து பணிமனை…
- அம்பத்தூர் தொழிற்பேட்டை பணிமனை
- தின மலர்
அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டை மாநகர போக்குவரத்து பணிமனையில், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை மாநகரில் வாகன விபத்துக்களை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆவடி போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் ஜெயலட்சுமி அறிவுறுத்தலின்படி, செங்குன்றம் போக்குவரத்து உதவி ஆணையர் மலைச்சாமி மற்றும் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு உதவி ஆணையர் ஆல்ட்ரின் தலைமையில் நேற்று அம்பத்தூர் தொழிற்பேட்டை மாநகர போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் போக்குவரத்து ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், அம்பத்தூர் தொழிற்பேட்டை மாநகரப் போக்குவரத்து பணிமனையின் பொது மற்றும் துணை மேலாளர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் போக்குவரத்து விதிமீறல், சாலை பாதுகாப்பு, பயணிகளின் பாதுகாப்பு, பயணிகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
The post அம்பத்தூர் தொழிற்பேட்டை பணிமனையில் போக்குவரத்து விதிமுறைகள் விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.
