×

சென்னை கடற்கரை முதல் வேலூர் வரை செல்லும் சிறப்பு ரயில், கிரிவலத்துக்காக திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

சென்னை: சென்னை கடற்கரை முதல் வேலூர் வரை செல்லும் சிறப்பு ரயில், கிரிவலத்துக்காக திருவண்ணாமலை வரை நீடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் விழாவை முன்னிட்டு, சென்னை கடற்கரை – வேலூர் கன்டோன்மென்டுக்கு இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட உள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து செப்.29-ம் தேதி மாலை 6 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06033) புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை இரவு 9.45 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.

திருவண்ணாமலையில் இருந்து செப்.30-ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06034) புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை அதிகாலை 5.35 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 9.05 மணிக்கு வந்துசேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை கடற்கரை முதல் வேலூர் வரை செல்லும் சிறப்பு ரயில், கிரிவலத்துக்காக திருவண்ணாமலை வரை நீட்டிப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai beach ,Vellore ,Tiruvannamalai ,Krivalath ,CHENNAI ,Tiruvannamalai… ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...