திருச்சி : திருச்சியில் ரூ.600 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை 2023-24ம் ஆண்டிற்கான தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார். அப்போது, திருச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த 10 லட்சம் சதுர அடியில் ரூ.600 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) ஒன்று நிறுவப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் கிராமம் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்துக்கு அருகே புதிதாக டைடல் பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.இந்த டைடல் பூங்காவில் ரூ. 600 கோடி மதிப்பில் 10,000 ஊழியர்கள் பணியாற்றும் வகையில் அலுவலகமும், கூட்ட அரங்கம், தரவு மையங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.இந்த நிலையில், இதற்கான டெண்டரை வெளியிட்டுள்ள தமிழக அரசு, தகுதியுடைய நிறுவனங்கள் வருகிற அக்டோபர் 26ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
The post திருச்சியில் இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்…விரைவில் வருகிறது டைடல் பார்க்.. டெண்டர் கோரிய தமிழக அரசு!! appeared first on Dinakaran.
