×

உத்திரமேரூர் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்: சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களை சுந்தர் எம்எல்ஏ வழங்கினார். உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், திமுக மருத்துவரணி சார்பில், அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முத்தமிழ் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காஞ்சி மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர். திவாகர் வாசுதேவன் தலைமையில் நடந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழாவில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.டி.அரசு, ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூராட்சி மன்றத் தலைவர் பொன்.சசிகுமார், நகர செயலாளர் பாரிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனை, எல்.எண்டத்தூர், படூர் உள்ளிட்ட நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கி வாழ்த்தி பேசினார். பின்னர், மருத்துவ அணியில் புதியதாக இணைந்த மருத்துவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திமுக மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் ஓவியக்கண்ணன், பேரூராட்சி கவுன்சிலர் தனசேகரன் மற்றும் மருத்துவ அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post உத்திரமேரூர் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்: சுந்தர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Uttaramerur government ,Sundar MLA ,Uttaramerur ,Uttaramerur Govt Public… ,Uttaramerur Govt Hospitals ,Sundar ,MLA ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...