கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரிக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜ மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜ., செயலாளராக இருப்பவர் முருகேசன்(42). இவர், தன் பேஸ்புக் சமூக வலைதளத்தில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதிக்கு எதிராக, ‘கோ பேக் உதயநிதி’ என பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து அவரை நேற்று பர்கூர் போலீசார், பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
The post பாஜ மாவட்ட செயலாளர் கைது appeared first on Dinakaran.
