×

கள்ளக்குறிச்சியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 1021 பேருக்கு பணி ஆணை

 

கள்ளக்குறிச்சி, செப். 24: கள்ளக்குறிச்சியில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 1021 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையைஅமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வெ.கணேசன்ஆகியார் வழங்கினர். கள்ளக்குறிச்சி ஏகேடி பள்ளி வளாகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.

எம்எல்ஏக்கள் வசந்தம்கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் வரவேற்றார். வேலைவாய்ப்பு முகாமில் 152 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 10,132 இளைஞர்கள் கலந்து கொண்டனர். முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு முகாமில் தேர்வான 1021 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர்.

தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்பதற்காகதான் இத்தகைய தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு உளுந்தூர்பேட்டையில் சிப்காட் தொழிற்சாலையினை முதலமைச்சர் வழங்கி உள்ளார் என்றார்.

இதில் மாவட்ட எஸ்பி மோகன்ராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரிபெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) லதா, துணை இயக்குநர் மணி, உதவி இயக்குநர் பாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன், தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெய்சங்கர், ஏகேடி பள்ளி தாளாளர் மகேந்திரன், நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் கலந்துகொண்டனர்.

The post கள்ளக்குறிச்சியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 1021 பேருக்கு பணி ஆணை appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kalakurichi ,
× RELATED கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில்...