×

வானூர் முன்னாள் எம்எல்ஏ காலமானார்

 

வானூர், மே 31: வானூர் தாலுகா கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம்(83). இவர் கடந்த 1977ம் ஆண்டு திமுக சார்பில் வானூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1980 வரை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பின்னர் அவர், சொந்த ஊரான கிளியனூர் கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். அவரது உடல் நேற்று அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பரமசிவம் இறந்த செய்தி கேட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

The post வானூர் முன்னாள் எம்எல்ஏ காலமானார் appeared first on Dinakaran.

Tags : Vanur ,MLA ,Paramasivam ,Klianur ,Vanur taluk ,DMK ,Legislative Assembly ,
× RELATED வானூர் முன்னாள் எம்எல்ஏ மறைவு முதல்வர் இரங்கல்